×

கொம்பன்குளம் சாலையில் மெகா பள்ளம் சீரமைப்பு

சாத்தான்குளம், நவ. 23: கொம்பன்குளம் சாலையில் காணப்பட்ட மெகா பள்ளத்தை தினகரன் செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிகமாக சீரமைத்துள்ளனர். சாத்தான்குளத்தில் இருந்து அமுதுண்ணாக்குடி, நெடுங்குளம் விலக்கு, கீழக்குளம் வழியாக கொம்பன்குளம், இரட்டைகிணறு, இட்டமொழி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இங்குள்ள கோழிப்பண்ணை அருகில் மெகா பள்ளம் உருவாகி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும் கீழக்குளம்- கொம்பன்குளம் இடையே உள்ள சாலையில் பெரும் பள்ளம் காணப்பட்டது. இதுகுறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தொடர் புகார் தெரிவித்து வந்த நிலையில், தினகரனிலும் கடந்த 19ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில் சாத்தான்குளம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு சாலையில் உள்ள பள்ளத்தை மணல் சரள் கொட்டி தற்காலிகமாக சீரமைத்தனர். மழை காலம் முடிந்ததும் தார் ஊற்றி முழுமையாக சீரமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

The post கொம்பன்குளம் சாலையில் மெகா பள்ளம் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Kompankulam road ,Satankulam ,Dhinakaran ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை