×

தென்காசியில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி, நவ.23: தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளி) நடைபெறும் என்று கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளி) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வைத்து நடைபெறவுள்ளது. அனைத்து துறை அலுவலர்களும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். எனவே அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்வதோடு மனுவில் தங்களது கைபேசி எண்ணையும் தவறாது குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவசாய குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுவிற்கான ஒப்புகையும் மனுவின் கோரிக்கை தொடர்பான விபரங்களும் அனைத்து வகை கைபேசிகளிலும் பார்க்கும் வண்ணம் செயலி வாயிலாக குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இக்குறைதீர் கூட்டத்தில் விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

The post தென்காசியில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Farmers' Grievance Meeting ,Tenkasi ,Collector ,Durai ,Dinakaran ,
× RELATED கணவரிடம் இருந்து பாதுகாக்க...