×

டாக்டர் சீட்டு இல்லாமல் விற்பனை 123 மருந்து கடை உரிமம் ரத்து

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிறுவனங்களில் தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விதிமீறல்களில் ஈடுபட்ட மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள் மீது கடந்த 6 மாதங்களில் 117 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை, விநியோகம் செய்த 6 மருந்து விற்பனை கடைகளின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

வருங்காலங்களிலும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை, விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

The post டாக்டர் சீட்டு இல்லாமல் விற்பனை 123 மருந்து கடை உரிமம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Secretary of ,Public Welfare ,Tamil Nadu Drug Control Department ,
× RELATED பணிக் காலத்தில் இறந்த அரசு...