×

திருமங்கலம் அருகே அறநிலையத்துறையினர் கோயிலில் உண்டியல் பணத்தை எண்ண பொதுமக்கள் எதிர்ப்பு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

திருமங்கலம், நவ. 23: திருமங்கலம் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலில் உண்டியல் பணத்தினை அறநிலையத்துறையினர் எண்ணகிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலம் அருகேயுள்ள சித்தாலை கிராமத்தில் புகழ்பெற்ற சுந்தரவல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்தகோயிலை கடந்த 2018ம் ஆண்டு இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஏற்கனவே கிராமபொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது சம்மந்தமாக வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று இந்து சமய அறநிலையைத்துறை சார்பில் சுந்தரவல்லி அம்மன் கோயிலில் உண்டியல் எண்ண முடிவு செய்யப்பட்டு அதிகாரிகள் வந்தனர்.

இதற்கு சித்தாலை, மேலஉரப்பனூர், நல்லபிள்ளைபட்டி, புங்கன்குளம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோயில் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிராமத்தினை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கிராமநிர்வாகிகள் வரவுசெலவு கணக்குகளைபார்த்து வருவதாகவும் இந்தாண்டு கோயில் உண்டியலை திறந்து எண்ண அறநிலையத்துறையினர் வரக்கூடாது என கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு அறநிலையத்துறையினர் உண்டியல் பணத்தினை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதனை கண்டித்து 50க்கும் மேற்பட்ட கிராமமக்கள் திரண்டு கோயில் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

The post திருமங்கலம் அருகே அறநிலையத்துறையினர் கோயிலில் உண்டியல் பணத்தை எண்ண பொதுமக்கள் எதிர்ப்பு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Ministry of Finance ,Ministry of Finance of India ,
× RELATED மாடு முட்டி முதியவர் சாவு