×

பிரேசிலை வீழ்த்தியது அர்ஜென்டினா

2026 ஃபிபா உலக கோப்பை கால்பந்து தொடருக்கான தென் அமெரிக்க தகுதிச்சுற்று போட்டியில், பிரேசில் அணியுடன் மோதிய அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. 63வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி லோ செல்சோ பிரேசில் கோல் பகுதிக்கு மேலாகப் பறக்கவிட்ட பந்தை நிகோலஸ் ஒட்டமெண்டி அற்புதமாக தலையால் முட்டி கோல் அடித்தார். தென் அமெரிக்க பிரிவில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அர்ஜென்டினா 6 போட்டியில் 5 வெற்றி, 1 தோல்வியுடன் 15 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. 5 முறை சாம்பியனான பிரேசில் அணி 6 போட்டியில் 2 வெற்றி, 1 டிரா, 3 தோல்வியுடன் 7 புள்ளிகள் மட்டுமே பெற்று 6வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

The post பிரேசிலை வீழ்த்தியது அர்ஜென்டினா appeared first on Dinakaran.

Tags : Argentina ,Brazil ,2026 FIFA World Cup football ,Dinakaran ,
× RELATED அர்ஜெண்டினாவில் உள்ள அக்கோன்காகுவா...