×

தீவிரவாதத்தை சகித்து கொள்ள முடியாது: ஜி-20 தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: ஜி-20 தலைவர் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி தீவிரவாதத்தை சகித்து கொள்ள முடியாது என்று உறுதிபட தெரிவித்தார். இந்தியா தலைமையிலான ஜி-20 தலைவர்களின் மாநாடு டெல்லியில் நேற்று காணொலி மூலம் நடந்தது. இதில் பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, “இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இரு நாடுகளின் தீர்மானம் நிரந்தர தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே இந்த தீவிரவாத, அரசியல் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். உறுப்பு நாடுகள் அனைத்தும் தீவிரவாதத்தையும் வன்முறையையும் வன்மையாக கண்டிக்கின்றன. மேற்கு ஆசியாவில் நிலைத்தன்மை மற்றும் அமைதி ஏற்பட வேண்டும். காசாவுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் உடனடியாக கிடைக்க செய்ய வேண்டும். இதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய ஜி-20 நாடுகள் தயாராக இருக்கின்றன. தெற்கு உலக நாடுகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற ஜி-20 நாடுகள் தொடர்ந்து பணியாற்றும்,” என்று தெரிவித்தார்.

The post தீவிரவாதத்தை சகித்து கொள்ள முடியாது: ஜி-20 தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,G-20 summit ,New Delhi ,Modi ,India ,Dinakaran ,
× RELATED லோக்சபா தேர்தல் வருவதால் அடுத்த 3...