×

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை 203 கிராம பஞ்சாயத்துகளில் 1,232 சுகாதார முகாம்கள்: 1,66,000 பேர் பங்கேற்பு; ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையின்கீழ் நடத்தப்பட்ட சுகாதார முகாம்களில் 1,66,000 பேர் பங்கேற்றதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்களை நாடு முழுவதும் கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 15ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். யாத்திரையின் முதல் வாரத்தில் நவம்பர் 21ம் தேதி நிலவரப்படி 203 கிராம பஞ்சாயத்துகளில் 1.232 சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் 1,66,000 மக்கள் பங்கேற்றுள்ளனர். இந்த முகாம்களில் ஒன்றிய சுகாதார அமைச்சக முதன்மை திட்டத்தின்கீழ், 33,000க்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் சுகாதார அட்டைகள் உருவாக்கப்பட்டு, 21,000க்கும் மேற்பட்ட அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. முகாமின் முதல் வாரஇறுதியில் 41,000க்கும் மேற்பட்டோர் பரிசோதிக்கப்பட்டு, 4,000க்கும் அதிகமானோர் உயர் பொதுசுகாதார நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

The post வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை 203 கிராம பஞ்சாயத்துகளில் 1,232 சுகாதார முகாம்கள்: 1,66,000 பேர் பங்கேற்பு; ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : India Sapad Yatra ,Union Ministry of Health Information ,New Delhi ,Union Health Ministry ,Pledge Yatra.… ,India ,Union Health Ministry Information ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி