×

தெலங்கானாவில் மேலும் ஒரு காங் வேட்பாளர் வீட்டில் ரெய்டு

புதுடெல்லி: ஐதராபாத் உப்பலில் கட்டப்பட்ட ராஜீவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில் பொருட்கள் வாங்கியதில் ரூ.20 கோடி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தெலங்கானா ஊழல் தடுப்பு பிரிவு 3 வழக்குகளை பதிவு செய்தது. இதை தொடர்ந்து தெலுங்கானாவில் நேற்று முன்தினம் சென்னூர் காங்கிரஸ் வேட்பாளர் விவேக் வீடு உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதன் ஒருபகுதியாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிவ்லால் யாதவ், அடிலாபாத் மாவட்டத்தில் உள்ள பெல்லம்பள்ளி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் காட்டம் வினோத் மற்றும் அர்ஷத் அயூப் ஆகியோரின் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் டிஜிட்டல் சாதனங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் 10.39 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன. தெலங்கானாவில் மேலும் ஒரு காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் ரெய்டு நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தெலங்கானாவில் மேலும் ஒரு காங் வேட்பாளர் வீட்டில் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,Telangana ,New Delhi ,Rajiv ,Gandhi ,cricket stadium ,Hyderabad ,
× RELATED மாநிலங்களவையிலும் பெரும்பான்மை பலம் பெறும் பாஜ கூட்டணி