×

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழல் வழக்கு விசாரணை ஆளுநர் அனுமதி தராத மர்மம் என்ன? ‘வசூல் ராஜா அண்ணாமலை’ மீது சந்தேகம் என கரூர் எம்பி., ஜோதிமணி பரபரப்பு வீடியோ

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆளுநர் அனுமதி தராத விவகாரத்தில் ‘வசூல் ராஜா அண்ணாமலை’ மீது சந்தேகம் உள்ளதாக என கரூர் எம்பி., ஜோதிமணி பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்துவீடியோவில் தெரிவித்துள்ளதாவது: அதிமுகவின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அனுமதி கேட்டு கோப்பு வரவில்லை என்று கூறிஉவிட்டு, தற்போது வந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்து உள்ளார். ஒரு ஆளுநர், இவ்வளவு அப்பட்டமாக பொய் சொல்வதன் அவசியம் என்ன? இன்று வரை கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது விசாரணை மேற்கொள்ள ஆளுநர் அனுமதி தர மறுக்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன?.

இந்த மர்மத்துக்கு பின்னால் பாஜவின் மாநில தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா? என்ற கேள்வியை கேட்க வேண்டியுள்ளது. கரூரில் மட்டும், அதிமுகவுக்கும், பாஜவுக்கும் இடையே அண்டர்ஸ்டேண்டிங் உள்ளது போல தோன்றுகிறது. தமிழகம் முழுதும் பல டீலிங் நடத்தும் வசூல் ராஜாவாக அண்ணாமலை உள்ளார். இதேபோன்ற டீலிங்கில்தான் விஜயபாஸ்கருக்கும், ஆளுநருக்கும் இடையே அண்ணாமலை இருந்துள்ளரா? என்ற கேள்வி எழுகிறது. அண்ணாமலையால்தான் ஆளுநர், விஜயபாஸ்கரின் கோப்புகளை தொட மறுக்கிறரா? என தெரியவில்லை. இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதற்கு பின்னால் உள்ள டீலிங் என்ன என்பதை விளக்க வேண்டும்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

The post எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழல் வழக்கு விசாரணை ஆளுநர் அனுமதி தராத மர்மம் என்ன? ‘வசூல் ராஜா அண்ணாமலை’ மீது சந்தேகம் என கரூர் எம்பி., ஜோதிமணி பரபரப்பு வீடியோ appeared first on Dinakaran.

Tags : M.R.Vijayabaskar ,Karur ,MP Jyotimani ,Vasool ,Annamalai ,Vasool Raja Annamalai ,AIADMK ,minister ,Dinakaran ,
× RELATED வாங்கல் அருகே உயர் ரத்த அழுத்த பாதிப்பால் மயங்கி விழுந்த பெண் பரிதாப பலி