×
Saravana Stores

கனமழை எதிரொலி: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் மலையேற தடை

விருதுநகர்: கனமழை எதிரொலியால் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம், பௌர்ணமி தினங்களுக்காக 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை சதுரகிரி மலையேற அனுமதி இருந்தது. தற்போது அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சதுரகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக கார்த்திகை மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷத்திற்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வாரம்தோறும் பிரதோஷம், அமாவாசை 8 நாட்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினமான வரும் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை சதுரகிரி மலையேற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய இயலாது என வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சதுரகிரி பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வரும் கார்த்திகை மாத பௌர்ணமி பிரதோஷத்திற்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post கனமழை எதிரொலி: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் மலையேற தடை appeared first on Dinakaran.

Tags : Chathuragiri Sundara Mahalingam temple ,Srivilliputhur ,Virudhunagar ,Poornami… ,
× RELATED சுட்டீஸ் முதல் சுகர் உள்ளவர்கள் வரை...