×

கீரை ராய்த்தா

தேவையானவை:

ஏதாவது ஒரு கீரை – 1 கட்டு,
பச்சை மிளகாய் – 2,
பெரிய வெங்காயம் – 1,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு – கால் டீஸ்பூன்,
தயிர் – 1 கப்,
உப்பு – தேவைக்கேற்ப,
துருவியதேங்காய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

கீரையை நன்கு அலசிக் கழுவி, தண்டை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயை இரண்டாகக் கீறவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைசுடவைத்து, கடுகு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கீரை சேர்த்து வதக்கவும். வதக்கியதும்உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இறக்கி ஆறியதும் தயிரைக் கலக்கவும். உடலுக்குக்குளிர்ச்சி தரும் இந்தக் கீரை ராய்த்தா. எல்லாக் கீரை வகைகளிலும் செய்யலாம் என்றலும்முளைக்கீரை, அரைக்கீரை என்றால் கூடுதல் சுவை தரும்.

The post கீரை ராய்த்தா appeared first on Dinakaran.

Tags :
× RELATED பருப்பு ரசம்