×

ரேமாண்ட் நிறுவன அதிபர் கவுதம் சிங்கானியா, மனைவி நவாஸ் மோடி இடையிலான பிரிவால் நிறுவன மதிப்பு ரூ.1,500 கோடி சரிவு

டெல்லி: ரேமாண்ட் நிறுவன அதிபர் கவுதம் சிங்கானியா, மனைவி நவாஸ் மோடி இடையிலான பிரிவால் நிறுவன மதிப்பு ரூ.1,500 கோடி சரிந்துள்ளது. 32 ஆண்டு திருமண வாழ்க்கையில் சிங்கானியா நாவஸ் மோடி இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவு ஏற்பட்டுள்ளது. தன்னையும், தன் மகளையும் கணவர் கவுதம் சிங்கானியா தாக்கியதாக மனைவி நவாஸ் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ரேமாண்ட் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டதாக நவாஸ் புகார் தெரிவித்தார். வீட்டுக்குள்ளேயே தன்னையும் மகளையும் அனுமதிக்கவில்லை என்றும் கவுதம் சிங்கானியா மீது நவாஸ் மோடி குற்றம் சாட்டினார்.

ரேமாண்ட் அதிபர் கவுதம் சிங்கானியா உடனான 32 ஆண்டு திருமண உறவை முறித்துக் கொள்ள மனைவி முடிவு செய்துள்ளார். ரேமாண்ட் அதிபர் கவுதம் சிங்கானியாவின் சொத்து மதிப்பு ரூ.11,665 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. திருமணத்தை முறித்துக் கொள்ளும் தனக்கு கணவர் சிங்கானியா தன் சொத்தில் 75% தர வேண்டும் என கோருகிறார் நவாஸ் மோடி தெரிவித்துள்ளார். ரேமாண்ட் நிறுவன மேலாண் இயக்குநரான கவுதம் சிங்கானியா நவாஸ் மோதல் பகிரங்கமானதால் நிறுவன பங்கு விலை சரிந்துள்ளது. நவ.12-ல் ரூ.1,901 ஆக இருந்த ரேமாண்ட் நிறுவன பங்கு விலை பத்தே நாட்களில் 12% சரிந்து ரூ.1,676.55 ஆக குறைத்துவிட்டது. பங்கு விலை சரிவால் ரேமாண்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு பத்தே நாட்களில் ரூ.1,500 கோடி வீழ்ச்சி அடைந்துள்ளது.

The post ரேமாண்ட் நிறுவன அதிபர் கவுதம் சிங்கானியா, மனைவி நவாஸ் மோடி இடையிலான பிரிவால் நிறுவன மதிப்பு ரூ.1,500 கோடி சரிவு appeared first on Dinakaran.

Tags : Raymond ,Gautam Singhania ,Nawaz Modi ,Delhi ,Raymond Company ,Dinakaran ,
× RELATED பதவி உயர்வு, மாநில முன்னுரிமை முதல்வர்...