×

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நர்சரியில் அலங்காரசெடி தயார் செய்யும் பணி தீவிரம்: சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை


ஊட்டி: சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக அலங்கார செடிகள் தயார் செய்யும் பணி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நர்சரியில் தீவிரமாக நடந்து வருகிறது. லகிரி மாவட்டத்துக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவுக்கு சென்று அங்குள்ள பல்வேறு வகையான மலர் செடிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். அத்துடன் அங்கு வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான கள்ளிச் செடிகள் மற்றும் பெரணி செடிகளையும் கண்டு ரசித்துச் செல்வது மட்டுமின்றி அவைகளை வாங்கி செல்கின்றனர்.

இதனால் பல்வேறு வகையான மலர் செடிகள் மற்றும் கள்ளிச் செடிகளை விற்பனை செய்வதற்காக ஊட்டி தாவரவியல் பூங்கா நர்சரியில் பல்லாயிரம் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படுகிறது. இந்த தொட்டிகள் ரூ.50 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக தயார் செய்யப்படும் இந்த மலர் தொட்டிகள் பராமரிப்பு பணிகளில் நாள்தோறும் பூங்கா ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இந்தநிலையில் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக தற்போது பூங்காவில் உள்ள நர்சரியில் மூன் ஸ்டோன், எஃவிரியா உள்ளிட்ட பல்வேறு வகையான அலங்கார செடிகள் தயார் செய்யும் பணி மற்றும் அவற்றை பராமரிக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நர்சரியில் அலங்காரசெடி தயார் செய்யும் பணி தீவிரம்: சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : State Botanical Garden of ,Ooty ,FEEDER ,STATE ,PARK ,Dinakaran ,
× RELATED உதகை அரசு தாவரவியல் பூங்காவில்...