×

டெல்டாவில் இடியுடன் கன மழை


திருச்சி: டெல்டா மாவட்டங்களில் இன்று காலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மரி கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. நாகை நகர் பகுதியில் காலை 6 மணியில் இருந்தும் வேதாரண்யத்தில் அதிகாலை 4 மணி முதலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகாலை 3 மணி முதலும் 1 மணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ருவாரூரில் அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

சில இடங்களில் சாரல் மழை பெய்தது. காரைக்கால் மாவட்டத்தில் நேற்றிரவு 11.30 மணி முதல் விடிய விடிய பரவலாக இடியுடன் மழை பொழிந்தது. தொடர்ந்து காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. பெரம்பலூரில் அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை கன மழை கொட்டியது. மாவட்டம் முழுவதும் காலை 7 மணி முதல் விட்டு விட்டு சாரல் மழை பொழிந்தது. தஞ்சை, கரூர், திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மழை அறிகுறியுடள் வானம் மேகமூட்டத்துடன் இருட்டாக காணப்பட்டது. மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

ரயில் நிலைய சுவர் இடிந்தது
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரத்தில் ரயில் நிலையம் உள்ளது. சில தினங்களாக மழை பெய்து வந்ததால் ரயில் நிலைய தெற்கு பகுதி பிளாட்பாரம் உள்வாங்கி பக்கவாட்டில் அமைந்திருந்த சுற்றுச் சுவர் சுமார் 100 அடி நீளத்துக்கு இடிந்து விழுந்தது. ஆனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

The post டெல்டாவில் இடியுடன் கன மழை appeared first on Dinakaran.

Tags : Delta ,Trichy ,Mari Kadal ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED காவிரி டெல்டா பகுதிகளில், 5,338 கி.மீ...