×

சவுதியில் நடந்த விபத்தில் தமிழக தொழிலாளி உயிரிழப்பு: உடலை கொண்டுவரஅமைச்சரிடம் மனு


திருவெறும்பூர்: திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான்கோட்டை முல்லைவாசல் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர்(43). இவர் சவுதி அரேபியாவிற்கு தோட்ட வேலைக்காக சென்றார். இவரது மனைவி ரோஸ்லின் மேரி. இவர்களது மகள்கள் இவாஞ்சலின், ஏஞ்சல். இந்த நிலையில், ஒரு வருட ஒப்பந்தம் முடிந்த பிறகு மீண்டும் அதை புதுப்பித்து 2ம் ஆண்டாக வேலை செய்து வந்தார். கடந்த 18ம் தேதி இரவு ராஜசேகர் பணி முடிந்து தான் தங்கியிருந்த அறைக்கு செல்லும் வழியில், சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுபற்றிய தகவல் அவரது மனைவி ரோஸ்லின் மேரிக்கு தெரிவிக்கப்பட்டது. தனிடையே ராஜசேகரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனைவி மற்றும் குழந்தைகள் நேற்று கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடமும் அவர்கள் மனு அளித்துள்ளனர்.

The post சவுதியில் நடந்த விபத்தில் தமிழக தொழிலாளி உயிரிழப்பு: உடலை கொண்டுவரஅமைச்சரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Saudi ,Thiruverumpur ,Rajasekhar ,Mullaivasal ,Vazavanthankot ,Tiruverumpur, Trichy ,Saudi Arabia ,
× RELATED சவுதி மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு