×

பள்ளி மாணவன் தற்கொலை: உடலை கொண்டு செல்ல முடியாததால் மறியல்


கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோயில் அருகே உள்ள திருப்பந்துறை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மகன் பிரவீன்(14). துக்காச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். நேற்றுமுன்தினம் பள்ளிக்கு வராததால் ஆசிரியர், பிரவீனின் தந்தைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த செல்வமணி,மகனிடம் ‘’ஏன் பள்ளிக்குசெல்லவில்லை’’ என கேட்டபோது, ‘’நான் பள்ளிக்கு சென்றேன்’’ என கூறியுள்ளார். இதன்பிறகு நாளை பள்ளிக்கு நேரில் வந்து கேட்கிறேன் என்று செல்வமணி கூறியதால், அதற்கு பயந்த பிரவீன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்ததும் கும்பகோணம் போலீசார் சென்று மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ந்தநிலையில் திருப்பந்துறை கடைவீதியில் உடலை எடுத்து செல்வதற்கு உரிய சாலை வசதி இல்லை என வலியுறுத்தி பிரவீனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருப்பந்துறை கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டத்தை கைவிட்டனர்.

The post பள்ளி மாணவன் தற்கொலை: உடலை கொண்டு செல்ல முடியாததால் மறியல் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Selvamani ,Tirupanthura Kaliamman Koil Street ,Nachiarkoil, Kumbakonam, Tanjore district ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் இன்ஜின் தடம் புரண்டது