×

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11வது முறையாக டிச.4ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை அரசு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் டிச.4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை டிச.4ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 11வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காணொளி வாயிலாக சென்னை முதனமை அமர்வு நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லி முன்பு, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், காவல் நீட்டிக்கப்பட்டது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாத்துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சமீபத்தில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவை என மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு பல்வேறு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. அதுவும், சென்னை ஓமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது.

செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பதால் அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கி உள்ளதாகவும், நரம்பியல் மருத்துவர்களும் அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் குழுவில் இடம் பெற்றிருந்ததாக முன்பு தகவல் வெளியாகியிருந்தது. குறிப்பாக நரம்பியல் தொடர்பான அதிநவீன பரிசோதனைகள் மேற்கொள்ள இருப்பதாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்டது. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 10வது முறையாக நீடிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்த நிலையில், தற்போது 11-ஆவது முறையாக டிசம்பர் 4ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11வது முறையாக டிச.4ம் தேதி வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Minister Senthil Balaji ,Government Hospital of Chennai ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...