×

நவம்பர் 26-ல் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரிக்கடலில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது. நேற்று இரவு முதல், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி , கோவை , திருப்பத்தூர், சேலம் , தேனி விருதுகர் என பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.

இன்று காலை வரையில் இந்த மழை நீடித்தது. இந்நிலையில், தற்போது வெளியான தகவலின்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், தஞ்சை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்கள் என 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் , திருநெல்வேலி, தென்காசி, கன்னியகுமார் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகம் தவிர, கேரளா, புதுச்சேரியிலும் கனமழை எச்சரிக்கை வடுக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 26-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அந்தமான் கடல் பகுதிகளில் 27-ல் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நவம்பர் 26-ல் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Met Office ,Chennai ,Meteorological Department ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து