×

நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து : நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு நேரில் ஆஜராக சென்னை காவல்துறை நோட்டீஸ்!!

சென்னை: நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜராக சென்னை காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் த்ரிஷா பற்றி பேசியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் என்ன பேசினார் என்றால் ” லியோ படத்தில் த்ரிஷாவுடன் என்று நடிக்கிறோம் என்றவுடன் ரொம்பவே சந்தோஷபட்டேன். கண்டிப்பா பேட் ரூம் சீன் எல்லாம் இருக்கும் நடித்துவிடலாம் ” என்பது போல சற்று கொச்சையாக பேசி இருந்தார்.

இதைத் தொடர்ந்து நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து தமிழ்நாடு டிஜிபி நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தியதையடுத்து ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 (எ), 509 ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் நடிகர் மன்சூர் அலிகான மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த நிலையில், நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜராக சென்னை காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேரடியாக அழைத்து விசாரிக்க அவருக்கு 41a எனப்படும் நோட்டீஸ்-ஐ காவல்துறை அனுப்பியுள்ளது.

The post நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து : நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு நேரில் ஆஜராக சென்னை காவல்துறை நோட்டீஸ்!! appeared first on Dinakaran.

Tags : Trisha ,Chennai ,Mansoor Alikhan ,Mansoor Ali Khan ,Chennai Police ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு...