×

புதுவை வாய்க்காலில் முதலை 16 மணி நேரம் போராடி மீட்பு

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் சாலையில் உப்பனாறு வாய்க்காலில் முதலையை கடந்த 20ம் தேதி பாலத்தை ஒட்டியுள்ள கடை ஊழியர் ஏழுமலை பார்த்து கத்தி உள்ளார். அங்கு கூடிய பொதுமக்கள், முதலையை புகைப்படம் எடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து காமராஜ் சாலையில் ஏராளமான மக்கள் கூடினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட வாகன இரைச்சலால் முதலை தண்ணீருக்குள் மூழ்கி காணாமல்போனது.

இதையடுத்து முதலையை பிடிக்க கோழிக்கறி வைத்து கூண்டு வைக்கப்பட்டது. அதன்படி, அதிகாலை நேரத்தில், முதலை கோழிக்கறியை சாப்பிட வெளியே வந்து கூண்டுக்குள் சிக்கியது. இதனையடுத்து 16 மணி நேர போராட்டத்திற்குபின் முதலையை மீட்ட வனத்துறையினர், அதை தங்களது அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

 

The post புதுவை வாய்க்காலில் முதலை 16 மணி நேரம் போராடி மீட்பு appeared first on Dinakaran.

Tags : New Valley ,Puducherry ,Uppanaru Vaykal ,Kamaraj Road ,Puducherry Kamaraj Road ,
× RELATED நள்ளிரவில் கார்களை நூதனமாக மடக்கி...