×

தீபத்திருவிழாவுக்கு தற்காலிக பஸ் நிலையங்கள் விவரம் அறிவிப்பு

திருவண்ணாமலை, நவ.22: திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை செயல்பட உள்ள தற்காலிக பஸ் நிலையங்கள் எங்கெங்கு உள்ளது என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: வேலூர் ரோடு- அண்ணா நுழைவு வாயில்: போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு அவலூர்பேட்டைரோடு – எஸ்ஆர்ஜிடிஎஸ் பள்ளி எதிரில் திறந்தவெளி திடல்: வந்தவாசி, காஞ்சிபுரம் திண்டிவனம்ரோடு – ஒழுங்குமுறைவிற்பனைக்கூடம்: செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, தாம்பரம், அடையாறு, கோயம்பேடு வேட்டவலம்ரோடு – சர்வேயர்நகர் திறந்த வெளி திடல்: வேட்டவலம், விழுப்புரம் திருக்கோவிலூர் ரோடு – நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் மற்றும் அருணை மருத்துவக்கல்லூரி அருகில் மற்றும் வெற்றிநகர்: திருக்கோவிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாச்சலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி மணலூர்பேட்டைரோடு – செந்தமிழ்நகர் திறந்தவெளி திடல்: கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர்அணை செங்கம்ரோடு – அத்தியந்தல் மற்றும் சுபிக்க்ஷா கார்டன் மைதானம்: தருமபுரி, திருப்பத்தூர், சேலம், பெங்களூர், ஓசூர், ஈரோடு, கோயம்புத்தூர். காஞ்சிரோடு – டான்பாஸ்கோ பள்ளி மைதானம்: மேல்சோழங்குப்பம்

The post தீபத்திருவிழாவுக்கு தற்காலிக பஸ் நிலையங்கள் விவரம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Deepatri festival ,Thiruvannamalai ,Tiruvannamalai ,Deepa festival ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டம்...