×

பைக் மீது மினி லாரி மோதி கணவன், மனைவி பலி மகன் படுகாயம் வந்தவாசி அருகே விபத்து

வந்தவாசி, நவ.22: வந்தவாசி அருகே பைக் மீது மினி லாரி மோதியதில் கணவன் மனைவி பரிதாபமாக பலியானார்கள். படுகாயம் அடைந்த மகன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த புரிசை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(40), கட்டிட மேஸ்திரி. இவரதுமனைவி காமாட்சி (38). இவர்களுக்கு சுமித்திரா(17) என்ற மகளும், சிட்டிபாபு(16), முகேஷ்(13) ஆகிய மகன்களும் உள்ளனர். இந்நிலையில், காமாட்சியின் தாய் வீடான மாவளவாடி கிராமத்தில் அவரது தாய் சுந்தரம்(65), கடந்த 30 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

இதையொட்டி, 30வது நாள் சாமி கும்பிட நேற்று காலை 11 மணியளவில் காமாட்சி தனது கணவர் முருகேசன் மற்றும் இளைய மகனுடன் மொபட்டில் ெசன்று கொண்டு இருந்தனர். மொபட் நல்லூர் மின்வாரிய அலுவலகம் எதிரே சென்றபோது, எதிரே வந்த மினி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே முருகேசன் பலியானார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் காமாட்சியையும், முகேஷையும் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் காமாட்சி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

முகேஷுக்கு கால் முறிவு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய திண்டிவனத்தை சேர்ந்த லாரி டிரைவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து பலியான முருகேசனின் தம்பி கோவிந்தசாமி(30) கொடுத்த புகாரின் ேபரில் தெள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மொபட் மீது லாரி மோதி தம்பதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post பைக் மீது மினி லாரி மோதி கணவன், மனைவி பலி மகன் படுகாயம் வந்தவாசி அருகே விபத்து appeared first on Dinakaran.

Tags : Padukayam Vandavasi ,Vandavasi ,Badugayam Accident ,Dinakaran ,
× RELATED துப்பாக்கி குண்டுபாய்ந்து வாலிபர்...