×

உடன்குடியில் நர்ஸ் மாயம்

உடன்குடி, நவ. 22: உடன்குடி பிள்ளையார்பெரியவன்தட்டைச் சேர்ந்தவர் சாந்தி மகள் குபேதா. நர்சிங் பயிற்சி பெற்று உடன்குடியில் உள்ள மருத்துவமனையில் கடந்த 15ம் தேதி வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 18ம் தேதி வேலைக்கு சென்ற அவர், இரவு நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. உறவினர், தோழிகள் வீடுகள் உள்பட பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சாந்தி குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி மாயமான குபேதாவை தேடி வருகிறார்.

The post உடன்குடியில் நர்ஸ் மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Ekagudi ,Udengudi ,Shanti ,Kubeda ,Ebenkudi ,Pilliyarperiyavanthat ,Ebengudi ,
× RELATED காதலனுடன் பள்ளி மாணவி மாயம் தாய் சடலத்துடன் உறவினர்கள் மறியல்