×

எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளராக கண்ணையா மீண்டும் தேர்வு

சென்னை: எஸ்ஆர் எம்யூ பொதுச் செயலராக என்.கண்ணையா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். எஸ்.ஆர்.எம்.யூ. எனப்படும் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில், சென்னையில் நடைபெற்ற பொது மகா சபைக் கூட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செயலாளராக என்.கண்ணையா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைவராக ராஜா தர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதுதவிர, கோட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மீண்டும் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கண்ணையாவுக்கு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

The post எஸ்ஆர்எம்யூ பொதுச்செயலாளராக கண்ணையா மீண்டும் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Kannaiah ,General Secretary of ,SRMU ,CHENNAI ,General Secretary ,Southern Railway Mastur Union ,Kannaiya ,Dinakaran ,
× RELATED ஒரு சிலர் விலகியதால் ‘இந்தியா’வுக்கு...