×

நாட்டின் நலனுக்கான ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: ராம்நாத் வேண்டுகோள்

ரே பரேலி: நாட்டின் நலனுக்கான ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அக்கமிட்டியின் தலைவர் ராம்நாத் கோவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைபடுத்துவதில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனை செயல்படுத்துவதற்காக இந்தாண்டின் தொடக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி பொதுமக்கள், தேசிய கட்சிகளை தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள், பரிந்துரைகளை கேட்டு வருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்துக்கு வந்துள்ள அக்கமிட்டியின் தலைவர் ராம்நாத் கோவிந்த் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “நாடாளுமன்ற குழு, நிதி ஆயோக், இந்திய தேர்தல் ஆணையம் போன்று ஒரே நாடு ஒரே தேர்தல் முறையும் அமல்படுத்தப்பட வேண்டும். நாட்டின் நலனுக்கானஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். இதில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தொடர்பு இல்லை. மத்தியில் யார் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இது அவர்களுக்கு பலனளிக்கும். அது பாஜ அல்லது காங்கிரஸ் அல்லது வேறு எந்த கட்சியாக இருந்தாலும் பாகுபாடின்றி பலன் கிடைக்கும்,” என்று தெரிவித்தார்.

 

The post நாட்டின் நலனுக்கான ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: ராம்நாத் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Ramnath ,Ray Bareilly ,Ram Nath ,
× RELATED 18,626 பக்க அறிக்கை குடியரசுத் தலைவரிடம்...