×

தொல்லியல் துறையை கீழடியிலிருந்து வெளியேற்றியது ஏன்?: ஒன்றிய நிதியமைச்சருக்கு மதுரை எம்பி கேள்வி

மதுரை: உலகப் பாரம்பரிய வார விழாவையொட்டி மதுரையில் நேற்று முன்தினம் நடந்த தொல்லியல் துறை புகைப்படக் கண்காட்சியை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்து பேசுகையில் , ‘தமிழகத்தில் உள்ள பாரம்பரியத்தை மக்களுக்கு சொல்லக்கூடிய வாய்ப்பு இல்லையே எனும் மனவேதனை என்னிடத்தில் இருந்தது. தொல்லியல் பாறைகள் சிதிலமடைந்திருப்பது மனதுக்கு வேதனையளிக்கிறது’’ என கூறி இருந்தார். இந்நிலையில், மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது சமூக வலைத்தளத்தில், ‘‘ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரையில் இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) பற்றியும், தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் பெருமையோடு பேசியிருக்கிறார்.

அவருக்கு எனது நன்றி. தமிழ்நாட்டு வரலாற்றின் புதிய திருப்புமுனை கீழடி. ஆனால் இதே ஏஎஸ்ஐ, கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன் என்பதை கூற முடியுமா? இதே ஏஎஸ்ஐ கீழடி பற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணனின் ஆய்வறிக்கையை இன்று வரை வெளியிடாமல் வைத்திருப்பது ஏன் என்று கூற முடியுமா? இதே ஏஎஸ்ஐ இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றை எழுத தீர்மானித்த குழுவில் தமிழ்நாட்டு ஆய்வாளர் ஒருவரை கூட இடம் பெறச் செய்யாதது ஏன் என கூற முடியுமா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

The post தொல்லியல் துறையை கீழடியிலிருந்து வெளியேற்றியது ஏன்?: ஒன்றிய நிதியமைச்சருக்கு மதுரை எம்பி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Union Finance Minister ,World Heritage Week ,Union ,minister ,Finance Minister ,
× RELATED வங்கி அதிகாரிகள் நியமனத் தேர்வு...