×

டி20 தொடரில் இருந்து விலகினார் வார்னர்

அகமதாபாத்: இந்திய அணியுடன் நடக்க உள்ள டி20 தொடரில் இருந்து விலகுவதாக, ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர் டேவிட் வார்னட் அறிவித்துள்ளார். ஐசிசி உலக கோப்பை தொடரின் பரபரப்பான பைனலில் இந்தியாவுடன் மோதிய ஆஸ்திரேலியா, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 6வது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்தது. அடுத்து, இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது. இந்த தொடரில் முன்னணி வீரர்கள் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், டி20 தொடரில் இருந்து தொடக்க வீரர் வார்னர் விலகியுள்ளார். உலக கோப்பையில் அவர் 11 போட்டியில் 535 ரன் குவித்து (அதிகம் 163, சராசரி 48.63, சதம் 2, அரை சதம் 2) 6வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானுடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து வார்னர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், ‘யார் சொன்னது எனது கதை முடிந்துவிட்டது என்று’ என வார்னர் தனது X வலைத்தள பக்கத்தில் கேட்டுள்ளதால் சரவதேச ஒருநாள் மற்றும் டி20ல் அவர் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 தொடருக்கான ஆஸி. அணியில் வார்னர் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் (காயம்) ஆகியோருக்கு பதிலாக ஆரோன் ஹார்டி, கேன் ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளனர். உலக கோப்பையில் விளையாடிய 7 வீரர்களும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆஸி. டி20 அணி: மேத்யூ வேடு (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டிம் டேவிட், ஜோஷ் இங்லிஸ், ஆரோன் ஹார்டி, ஹேசன் பெஹரண்டார்ப், ஷான் அபாட், நாதன் எல்லிஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸம்பா, தன்வீர் சங்கா.

The post டி20 தொடரில் இருந்து விலகினார் வார்னர் appeared first on Dinakaran.

Tags : Warner ,T20 ,Ahmedabad ,David Warnet ,Dinakaran ,
× RELATED சர்வதேச டி20ல் அதிவேக சதம்: நிகோல் லாப்டி உலக சாதனை