×

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், பிளேஸ்பாளையம் ஊராட்சியில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் சைத்தூன் உத்தரவின்படி, கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. உதவி இயக்குனர் பாஸ்கர் மேற்பார்வையில், டாக்டர் சரவணகுமார் தலைமை வகித்தார். முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமில், ஊராட்சி மன்ற தலைவர் அருணா யுவராஜ், ஆம்புலன்ஸ் மருத்துவர் செந்தில் அமுதன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் குணசேகரன், சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post கோமாரி நோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Tags : Vaccination Camp ,Oothukottai ,Animal Husbandry Department ,Tamil Nadu Government ,Placepalayam Panchayat, ,Poondi Union ,Komari vaccination ,Dinakaran ,
× RELATED திருப்பணிசெட்டிகுளத்தில் கால்நடை மருத்துவ முகாம்