×

சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

ஆவடி: ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த செந்தில்குமார் என்கிற அன்பு செந்தில் (40), கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2008ம் ஆண்டு பொது இடங்களில் ஆபாசமாக பேசுதல், ஆபாசமாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர், 2009ல் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக, ஆவடி காவல் நிலையத்தில், சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக வலம் வந்தார். கடந்த சில நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செந்தில்குமார் நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, ஆவடி போலீசார் அவரை கைது செய்தனர்.

The post சரித்திர பதிவேடு குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Anbu Senthil ,Senthilkumar ,Kamarajar Nagar ,Dinakaran ,
× RELATED ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட...