×

கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவர் எடுத்த போட்டோவை பார்த்த மனைவி தற்கொலை

திருத்தணி: திருத்தணி நகராட்சி, அக்கையநாயுடு தெருவில் வசிப்பவர் ராஜேஷ் (33), தனியார் பேருந்து டிரைவர். இவரது மனைவி யோகேஸ்வரி (25). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. யோகித் (4) என்ற மகனும், சஞ்சனா (3) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு யோகேஸ்வரி, கணவரை பிரிந்து தாய் வீட்டில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்துள்ளார். கடந்த 15ம் தேதி ராஜேஷ் தனது நெருங்கிய தோழியுடன் இருக்கும் போட்டோக்களை யோகேஸ்வரியின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த யோகேஸ்வரி, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவர் எடுத்த போட்டோவை பார்த்த மனைவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Rajesh ,Akkaiyanaidu Street, Thiruthani Municipality ,Yogeswari ,
× RELATED பொதுமக்களின் பிரச்னைகள் உடனுக்குடன்...