×

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான ஊக்கத் தொகைத் திட்டம்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயற்படுத்தப்படும் முழுநேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2023-2024-ஆம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திட்ட விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவம் www.tn.gov.in/forms/deptname/1 என்ற இணையதள முகவரியில் யாவரும் பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.12.2023 நாளன்று மாலை 5.45 மணிக்குள்,“இயக்குநர், ஆதிதிராவிடர் நல ,இயக்குநரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை-600 005” என்ற முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முந்தைய கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது எனவும் கூறப்பட்டுள்ளது.

The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான ஊக்கத் தொகைத் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Adi Dravidian and ,Tribal Welfare ,Chennai ,Adi Dravidian and Tribal Welfare Department ,
× RELATED மாணவர்களின் கல்வி நலன் கருதி டெட்...