×

காய்கறி வடை

தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு – 200 கிராம்
கடலைப் பருப்பு – 100 கிராம்
கேரட் துருவல் – 1 கப்
கோஸ் பொடியாக நறுக்கியது – 1 கப்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் – 1 கப்
பச்சைப் பட்டாணி – 1 கப்
புதினா – சிறிதளவு
சோம்பு – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – 250 மில்லி
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் 1 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். இப்போது மாவுடன் கேரட் துருவல், கோஸ் பொடியாக நறுக்கியது, குடமிளகாய், சோம்பு, புதினா, பட்டாணி சேர்த்து கலக்கவும்.அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை சிறுசிறு உருண்டைகளாக செய்து பின்னர் தட்டையாக வடை போல் தட்டி எண்ணெய்யில் போட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சூடான காய்கறி வடை ரெடி.

The post காய்கறி வடை appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…