×

மத்திய பிரதேசத்தில் இளம் பெண் கடத்தல் விவகாரம்: மாணவி லாட்ஜில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்

மத்தியப் பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் இளம் பெண் கடத்தப்பட்ட நிலையில் மாணவி லாட்ஜில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ஜான்சி சாலை பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கும் போது இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டார். இரண்டு இளைஞர்கள் பைக்கில் அமர வைத்து அப்பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றது பெட்ரோல் பங்க்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதைக்கண்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தேடுதல் பணியை தொடங்கி, விசாரணை நடத்தி வந்த நிலையில் மாணவி லாட்ஜில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவரான சிங் சண்டேல் லஹரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் . மற்றொருவரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

The post மத்திய பிரதேசத்தில் இளம் பெண் கடத்தல் விவகாரம்: மாணவி லாட்ஜில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Madhya Pradesh… ,
× RELATED மத்தியப்பிரதேச மாநிலம் சிங்ராலி என்ற...