×

இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூற முடியுமா? : சு வெங்கடேசன் கேள்வி

சென்னை : ASI எனப்படும் இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன் என்பதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூற முடியுமா? என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மதுரையில் ASI பற்றியும், தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் பெருமையோடு பேசியிருக்கிறார்.

அவருக்கு எனது நன்றி. தமிழ்நாட்டு வரலாற்றின் புதிய திருப்புமுனை கீழடி. ஆனால் இதே ASI கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன் என்பதை கூற முடியுமா? இதே ASI கீழடி பற்றிய அமர்நாத் இராமகிருஷ்ணனின் ஆய்வறிக்கையை இன்று வரை வெளியிடாமல் வைத்திருப்பது ஏன் என்று கூற முடியுமா? இதே ASI இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றை எழுத தீர்மானித்த குழுவில் தமிழ்நாட்டு ஆய்வாளர் ஒருவரை கூட இடம்பெறச்செய்யாதது ஏன் என கூற முடியுமா? இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூற முடியுமா? : சு வெங்கடேசன் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Minister ,Nirmala Sitharaman ,Archeology Department of India ,Su Venkatesan ,Chennai ,ASI ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...