×

தெலுங்கானாவில் காங்கிரஸுக்கு திமுக ஆதரவு… வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என வேண்டுகோள்!!

ஹைதராபாத் : தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 30-ந்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தெலங்கானா சட்டசபை தேர்தலை பொறுத்தமட்டில் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதில் நேரடி போட்டி என்பது பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே தான் நடக்கிறது. அதோடு பல கருத்து கணிப்புகள் பிஆர்எஸ், காங்கிரஸ் கட்சிகளில் ஒன்று தான் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளன.இந்த நிலையில் தெலுங்கானாவில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் “வருகிற 2023 நவம்பர் 30 அன்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனவும், தெலுங்கானா மாநிலக் கழக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தேர்தல் பணிக்குழு அமைத்து, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி, அக்கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தெலுங்கானாவில் காங்கிரஸுக்கு திமுக ஆதரவு… வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என வேண்டுகோள்!! appeared first on Dinakaran.

Tags : TIMUKA ,TELANGANA ,Hyderabad ,Dimuka ,Congress party ,Telangana Assembly elections ,Congress ,
× RELATED மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற...