×

கிராமங்களில் சர்வதேச குழந்தைகள் உரிமை தினம்

 

ேசலம், நவ.21: ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள சர்வதேச குழந்தைகள் உரிமை தினம் நேற்று (20ம்தேதி) நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்போம் என்ற குரலோடு பல்வேறு இடங்களில் தன்னார்வ அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. இதன்படி சேலம் மாவட்டத்தில் ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையம், அம்மம்பாளையம், கல்லாநத்தம், நரசிங்கபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அரசமைப்பு கல்வி உரிமை மன்றம் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சு போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட அரசமைப்பு உரிமை கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா, மாவட்ட அமைப்பாளர் ராமு, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு மாவட்ட அமைப்பாளர் ஜெகதாம்பாள் ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்ந்து இது குறித்து அரசமைப்பு உரிமை கல்வித்திட்ட நிர்வாகிகள் கூறியதாவது: குழந்தைகளுக்கான உரிமைகளை உறுதிப்படுத்த அவர்களை அனைத்து தளத்திலும் எந்தவித பாகுபாடும் காட்டாமல் வளர்க்க வேண்டும். இதேபோல் நாட்டின் வருங்கால தூண்களாக இருக்கும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு, தனிபட்ஜெட் தாக்கல் செய்யவேண்டும். பெண்குழந்தைகள் விளையாடுவதற்கு கிராமங்களிலும், பள்ளிகளிலும் தனியாக விளையாட்டு மைதானங்களை உருவாக்க வேண்டும். பள்ளிகளில் சாதிய பாகுபாடுகள், ேமாதல்களை தவிர்க்க அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையை தினமும் வாசிக்கச் செய்யவேண்டும். அதோடு அரசமைப்பு சட்டத்தை ஒரு பாடமாக பள்ளிகளிகளில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் குழந்தைகளுக்கான உரிமைகள் மென்மேலும் உறுதிப்படுத்தப்படும். எனவே ஒன்றிய, மாநில அரசுகள் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

The post கிராமங்களில் சர்வதேச குழந்தைகள் உரிமை தினம் appeared first on Dinakaran.

Tags : International Children's Rights Day ,Salam ,United Nations ,International Children's Rights Day in ,Dinakaran ,
× RELATED உலக பத்திரிகை சுதந்திர நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து