×

கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

 

மல்லசமுத்திரம், நவ.21: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு கைத்தறி துறை சார்பில் இலவச மருத்துவ முகாம், மல்லசமுத்திரத்தில் நேற்று காலை நடந்தது. முகாமை பேரூராட்சி தலைவர் திருமலை தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் மனோரஞ்சிதம், திருச்செங்கோடு சரக கைத்தறி உதவி இயக்குனர் பழனிகுமார், கைத்தறி துணி நூல் கட்டுப்பாட்டு அலுவலர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் நுரையீரல், கண், எலும்பு மற்றும் மூட்டு வலி மற்றும் பொது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தனியார் கண் மருத்துவமனை மருத்துவர் கேசவ் தலைமையில், 217 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 104 பேருக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது. மேலும், கண் புரை அறுவை சிகிச்சைக்கு 42 பேர் பரிந்துரைக்கப்பட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கவுன்சிலர் லட்சுமி ரவி, வக்கீல் ஆனந்த், ஆனந்தராஜ், கைத்தறி அலுவலர்கள் அருண், ஆய்வாளர் கண்ணன் மற்றும் மேலாளர்கள் பங்கேற்றனர்.

The post கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Mallasamudram ,Artist Centennial Celebration ,Tamil Nadu Government ,Department of Linen ,
× RELATED மல்லசமுத்திரம் அருகே 5 வயது மகனை பிரம்பால் கொடூரமாக தாக்கிய தந்தை