×

சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு

 

திருச்செங்கோடு, நவ.21: ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு, ஈரோடு மாவட்டம் சோலாரில் புதியதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய கட்டிடம், பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தனர். பெருந்துறை பொன்முடி சக்கரகவுண்டம்பாளையத்தில், 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பொருத்தப்பட்டுள்ள நவீன நீர்மேலாண்மை திட்டம், சீனாபுரம் ஊராட்சி கல்லாங்குளத்தில் அங்கன்வாடி மையம் கட்டிடம் மற்றும் ரேஷன் கடையில் ஆய்வு செய்தனர்.

பின்னர், ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஆய்வுக்கூட்டம் நடத்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் பொது கணக்கு குழு தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், திருப்போரூர் பாலாஜி, மொடக்குறிச்சி சரஸ்வதி, பரமத்திவேலூர் சேகர், ஈரோடு மாவட்ட கலெக்டர் மற்றும் பொது கணக்கு குழு அலுவலர்கள், துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Legislative Public Accounts Committee ,Thiruchengode ,Tamil Nadu Assembly Public Accounts Committee ,Erode District ,Assembly Public Accounts Committee ,Dinakaran ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்