×

ஔவையார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

 

கிருஷ்ணகிரி, நவ.21: பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிர், ஔவையார் விருது பெற வரும் டிசம்பர் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு, தமிழக முதல்வரால் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுபவருக்கு 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ₹1 லட்சத்திற்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.

இந்த விருதிற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீர்த்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளக்கும் மகளிராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் நபர் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். பெண்களுக்கான சமூக சேவையை தவிர்த்து, வேறு சமூக சேவைகள் இவ்விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இவ்விருதிற்கு தகுதியான மகளிர் https://awards.gov.in என்ற இணையதளம் வாயிலாக, வரும் டிசம்பர் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post ஔவையார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,
× RELATED ஆடு, மாடு, கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு முறைகள்