×

மாநில அளவிலான பரத நாட்டிய போட்டியில் வின்ஸ் சி.பி.எஸ்.இ.பள்ளி மாணவி முதலிடம்

நாகர்கோவில், நவ.21: தேசிய அளவில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சகத்தின் (MoE) மூலம் ‘‘கலா உத்சவ்” என்ற ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கலைப் பண்பாட்டுத் திருவிழா மத்திய மற்றும் மாநில அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டிற்கான நடன போட்டியான செவ்வியல்- பரதநாட்டியம் பிரிவில், நாகர்கோவில், சுங்கான்கடை வின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி 9ம் வகுப்பு மாணவி அதிதி சந்திரசேகர் கன்னியாகுமரி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.

மாநில அளவிலான பரத நாட்டியப்போட்டி சேலம் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலிடம் பெற்று வின்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவி அதிதி சந்திரசேகர் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறைக்கு பெருமை சேர்த்தார். அவர் வரும் ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான பரதநாட்டிய போட்டியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் பங்கேற்க உள்ளார். மாணவி அதிதி சந்திரசேகருக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், நடுவர்கள் பவானி, தனசுந்தரி மற்றும் மஜா ஆகியோர் முன்னிலையில் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநில அளவில் பரதநாட்டிய போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்ற அதிதி சந்திரசேகரை பள்ளி நிறுவனர் நாஞ்சில் வின்சென்ட் வாழ்த்தினார்.

The post மாநில அளவிலான பரத நாட்டிய போட்டியில் வின்ஸ் சி.பி.எஸ்.இ.பள்ளி மாணவி முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Vince ,CBSE ,Bharata ,Nagercoil ,
× RELATED மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம்...