×

ரூ.15 லட்சம் இலவச வேட்டிகளை திருடிய நில அளவையர் கைது

மதுரை: மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின், வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சொந்தமான கருவூலத்தில் பொங்கல் பண்டிகையின்போது கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த, ரூ.15 லட்சம் மதிப்பிலான, 12,500 இலவச வேட்டிகள் கடந்த 7ம் தேதி திருடப்பட்டன. போலீஸ் விசாரணையில், சுல்தான் அலாவுதீன் (32), இப்ராகிம்ஷா (47), குமரன் (46), மணிகண்டன் (36) மற்றும் சாகுல் ஹமீது, நில அளவைத்துறை கள உதவியாளர் சரவணன் ஆகிய 6 பேர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்களில் அலாவுதீன், இப்ராகிம்ஷா, குமரன் மற்றும் மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரித்ததில், சரவணன் கடந்தாண்டு தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்ட வேட்டிகள் எனக்கூறி, ரூ.3.50 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த சரவணனை, தஞ்சாவூரில் போலீசார் நேற்று கைது செய்தனர். அவரின், மூன்று வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில், சரவணனை நிரந்தர பணிநீக்கம் செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

The post ரூ.15 லட்சம் இலவச வேட்டிகளை திருடிய நில அளவையர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai District Collector ,Pongal festival ,North District Collector ,Dinakaran ,
× RELATED கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்...