×

தாம்பத்திய வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி நண்பர்களுடன் மனைவியை ஆபாசமாக பேச வைத்து கூகுள் பேவில் பண வசூல் : 2வது கணவர் மீது கலெக்டரிடம் இளம்பெண் பரபரப்பு புகார்

விழுப்புரம்: தாம்பத்திய வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, அவர் சொல்லும் நண்பர்களுடன் செல்போனில் பேசி பணம் சம்பாதித்த 2வது கணவர் மீது கலெக்டரிடம் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். விழுப்புரம் அருகே பனையபுரத்தை சேர்ந்த தேவநாதன் மனைவி அஸ்வினி (23). இவர் நேற்று கைக்குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்துக்கு வந்தார். அப்போது அவர் தன்னையும் குழந்தையையும் கருணைக்கொலை செய்யும்படி கூறி ஒரு புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2018ல் கடலூர் மாவட்டம் கணசம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜியுடன் திருமணம் நடந்தது. எங்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் விவாகரத்து செய்தோம். இந்நிலையில் பெரியதச்சூரை சேர்ந்த தேவநாதன் என்னை காதலிப்பதாக கூறி, ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் பரவாயில்லை என கூறி 2021ல் மயிலம் கோயிலில் திருமணம் செய்தார். இருவரும் புதுச்சேரியில் வசித்து வந்தோம். எங்களுக்கு சுவாதி என்ற பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தேவநாதன் வேலைக்கு செல்லாமல் வருமானமின்றி இருப்பதாகவும், அவர் போன் செய்து கொடுக்கும் நபர்களிடம் ஆபாசமாக பேசி பணம் கேட்க வேண்டும், இல்லையென்றால் தாம்பத்தியத்தில் இருந்தபோது எனக்கு தெரியாமல் அவரது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும் அதனை சமூகவலைதளங்களில் அனுப்பி விடுவேன் என்றும் மிரட்டினார். இதனால் பயந்துபோய், அவர் பேச சொல்லி கொடுக்கும் நபர்களிடம் பேசியபோது கூகுல்பே எண்ணிற்கு பணத்தை பெற்றார். ஒரு கட்டத்தில் இதற்கு மறுத்தபோது என்னையும், குழந்தைகளையும் சித்ரவதை செய்தார்.

இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். தேவநாதன் விசாரணைக்கு வரும்போது அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்தார். தற்போது நான் 5 மாதம் கர்ப்பமாக உள்ளது தெரிந்து என்னை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி வருகிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு எங்களை கருணை கொலை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். தற்போது நான் 5 மாதம் கர்ப்பமாக உள்ளது தெரிந்து என்னை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி வருகிறார்.

The post தாம்பத்திய வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி நண்பர்களுடன் மனைவியை ஆபாசமாக பேச வைத்து கூகுள் பேவில் பண வசூல் : 2வது கணவர் மீது கலெக்டரிடம் இளம்பெண் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,
× RELATED இருவழி ரயில்பாதை: நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆணை