×

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ‘இதழாளர் கலைஞர்’ சிறப்பு மலர் வெளியீடு

 

கோவை, நவ.21: முத்தமிழ் அறிங்ஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இதழாளர் கலைஞர் நூற்றாண்டு விழாக் குழுவின் சார்பில் கருத்தரங்கம் கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கேஜி மருத்துவமனையின் தலைவர் பக்தவத்சலம் ‘இதழாளர் கலைஞர்’ என்ற சிறப்பு மலரை வெளியிட, அதனை கோவை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலர் சரசுவதி கண்ணையன் பெற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு அரசு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ் மஸ்தான், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, வழக்கறிஞர் தண்டபாணி, கவிஞர் கவிதாசன், பேச்சாளர் பர்வீன் சுல்தானா, புலவர் செந்தலை ந கவுதமன், கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணைமேயர் வெற்றிச்செல்வன் மற்றும் தமிழ் அறிஞர்கள், இதழாளர் கலைஞர் நூற்றாண்டு விழாக் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ‘இதழாளர் கலைஞர்’ சிறப்பு மலர் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Journalist Artist Centenary Committee ,Muthamij Scholar Artist Centenary ,Dinakaran ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...