×

4 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எல்லாமே பொய்: மோடி அரசை விளாசும் காங்கிரஸ்

புதுடெல்லி: டிவிட்டரில் இந்தியா 4 டிரில்லியன் டாலர், அதாவது ரூ.333 லட்சம் கோடி பொருளாதாரத்தை தாண்டிவிட்டதாக நேற்று முன்தினம் செய்தி பரப்பப்பட்டது. ஒன்றிய அமைச்சர்கள், மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தொழில் அதிபர் அதானி உள்ளிட்டோர் இந்த தகவலை டிவிட்டரில் வெளியிட்டு பிரதமர் மோடிக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். ஆனால் இவை எல்லாம் பொய் என்று காங்கிரஸ் விளாசி உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் தளத்தில்

பதிவிட்டுள்ளதாவது: நேற்று முன்தினம் மதியம் 2:45 மணி முதல் 6:45 மணி வரை, கிரிக்கெட் போட்டியைக் காண தேசமே ஆர்வமாக இருந்தபோது, ​​ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த மூத்த ஒன்றிய அமைச்சர்கள், மகாராஷ்டிராவின் துணை முதல்வர் உட்பட மோடி அரசை புகழ்ந்து பாராட்டும் பலர், பிரதமரின் மிகவும் விருப்பமான தொழிலதிபர் ஆகியோர் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளதாக டிவீட் செய்துள்ளனர். இது முழுக்க முழுக்க போலியான மற்றும் பொய்யான செய்தி.

 

 

The post 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எல்லாமே பொய்: மோடி அரசை விளாசும் காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Congress ,Modi government ,New Delhi ,Twitter ,India ,Dinakaran ,
× RELATED மாணவர்களின் கனவுகளை சிதைத்து...