×

தேசிய இளைஞர் தினவிழாவையொட்டி காஞ்சியில் வட்டார அளவிலான போட்டி : கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில், தேசிய இளைஞர் தினவிழாவையொட்டி வட்டார அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் தின விழாவையொட்டி, சென்னை பல்கலைக்கழகமும், காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டமும் இணைந்து கல்லூரி வளாகத்தில் பல்வேறு போட்டிகளை நடத்தின. இதில் சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமை தாங்கி, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளை தொடங்கி வைத்தார்.

கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை பேராசிரியர் கணபதி அனைவரையும் வரவேற்றார். இதில் தனி மற்றும் குழு நடனம், பேச்சு போட்டி, ஓவியப் போட்டி, சிறந்த புகைப்படப் போட்டி, கட்டுரை மற்றும் கதை எழுதும் போட்டி உள்ளிட்ட 8 விதமான போட்டிகள் நடைபெற்றன.  இப்போட்டிகளில் மாவட்டம் முழுவதும் உள்ள சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கல்லூரிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். நிகழ்வின்போது கல்லூரி பேராசியர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post தேசிய இளைஞர் தினவிழாவையொட்டி காஞ்சியில் வட்டார அளவிலான போட்டி : கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kanchi ,National Youth Day ,Kanchipuram ,Kanchipuram Sankara College ,
× RELATED சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த...