×

அதானி போன்றோர்களை பணக்காரர்களாக்குவதில் மட்டுமே மோடி அரசின் கவனம் உள்ளது: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!

ஜெய்ப்பூர்: அதானி போன்ற கோடீஸ்வரர்களை பணக்காரர்களாக்குவதில் மட்டுமே மோடி அரசின் கவனம் உள்ளது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் 23ம் தேதி தேர்தல் நடைபெறுவதால், நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. அதனால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் அனுப்கார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே; ராஜஸ்தான் காங்கிரஸ் அரசின் பொது நலத் திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியடையச் செய்து.

அவர்களின் சுயமரியாதையையும் கண்ணியத்தையும் உயர்த்தியுள்ளன. அதனால் காங்கிரசை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். இன்றும் நாட்டின் அரசுத் துறைகளில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அரசு வேலைகளைப் பெற முடியும் என்பதால், மோடி அரசு இந்தப் பணியிடங்களை நிரப்பவில்லை. அரசாங்கம் ஒப்பந்த அடிப்படையில் வேலைகளை வழங்குகிறது. ஆனால் இவர்களின் எதிர்காலம் என்னவாகும்? அதானி போன்ற கோடீஸ்வரர்களை பணக்காரர்களாக்குவதில் மட்டுமே மோடி அரசின் கவனம் உள்ளது.

ஹனுமன்கர் மாவட்டத்தில் பொதுமக்களின் ஆசியுடன் காங்கிரஸ் அரசு சிறப்பான பணிகளை செய்துள்ளது. மருத்துவக் கல்லூரி, விவசாயக் கல்லூரி, டவுன்ஹால், மாவட்ட பூங்கா, சாலைகள், ரயில்வே சுரங்கப்பாதைகள், ஆங்கில வழி பள்ளி, இந்திரா ரசோயில் ரூ.8க்கு முழு உணவு என நாம் என்ன உத்தரவாதம் தருகிறோமோ, அவற்றை நிறைவேற்றுகிறோம். அவர்கள் ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் முடியப்போகிறது. தற்போது மோடி அரசு வந்தபிறகு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆகிவிட்டதாக கூறுகின்றனர். அவர்கள் சொன்னது போல் இரட்டிப்பு ஆக்கிவிட்டார்களா?. மோடி ஜி என்ன உத்தரவாதம் தருகிறாரோ, அவை வெறும் வெற்று வாக்கியங்களாகி விடுகின்றன.

The post அதானி போன்றோர்களை பணக்காரர்களாக்குவதில் மட்டுமே மோடி அரசின் கவனம் உள்ளது: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்! appeared first on Dinakaran.

Tags : Modi government ,Jaipur ,Adani ,Mallikarjuna Karke ,Rajasthan ,
× RELATED பங்குச்சந்தை முறைகேடு: அதானி குழுமத்துக்கு செபி நோட்டீஸ்