×

சனாதனத்தை ஒழிப்பது என்றால் ராஜஸ்தான் மாநிலத்தின் கலாச்சாரத்தையே ஒழிப்பது போன்றது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சனாதனத்தை ஒழிக்க துடிப்பதாகவும், சனாதனத்தை ஒழிப்பது என்றால் ராஜஸ்தானின் கலாச்சாரத்தையே ஒழிப்பதாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எதிரான மன நிலையில் இருப்பதாகவும், பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடைபெறும் போது கண்மூடி கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் சனாதனத்தை ஒழிக்க விரும்புவதாக கூறிய பிரதமர் மோடி, சனாதனத்தை ஒழிப்பது என்றால் ராஜஸ்தான் மாநிலத்தில் கலாச்சாரத்தையே ஒழிப்பது என்று தெரிவித்தார். பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருப்பதாகவும், ராஜஸ்தானில் மட்டும் விலை குறைக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை குறைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

The post சனாதனத்தை ஒழிப்பது என்றால் ராஜஸ்தான் மாநிலத்தின் கலாச்சாரத்தையே ஒழிப்பது போன்றது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Sanadana ,Rajasthan State ,PM Narendra Modi ,JAIPUR ,RAJASTHAN ,Narendra Modi ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...