ஐதராபாத்: தெலுங்கான மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மைனாபாத் என்ற இடத்தில் ஒரு மைதானத்தில் டேபில் டென்னிஸ் விளையாட்டிற்கான உள்விளையாட்டு அரங்கம் கட்டபட்டு வருகிறது. இதில் மேற்கு வங்கம் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் திடீரென கட்டுமான பணி நடந்துவந்த மேற்கூரை இடிந்து விழுந்து. இதனை அடுத்து அதில் சிக்கி கொண்ட தொழிலாளர்கள் குறித்து அங்கிருந்த ஊழியர்கள் தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் மற்றும் தீயனைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுவரை 14 பேர் காயங்களுடன் மீட்கபட்ட சிலையில் 3 பேர் சடலமகா மீட்கபட்டுள்ளனர். தொடர்ந்து இடிபாடுகளை அகற்றி வேறு யாராவது இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என தேடும் பணியானது நடைபெற்று வருகிறது
The post ஐதராபாத் அருகே விளையாட்டு மைதானம் மேற்கூறை இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர்பலி appeared first on Dinakaran.
