×

திறன் மேம்பாட்டு பயிற்சி கழக ஊழல் வழக்கில் ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு

தெலுங்கானா: திறன் மேம்பாட்டு பயிற்சி கழக ஊழல் வழக்கில் ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திறன் மேம்பாட்டு பயிற்சி கழக ஊழல் வழக்கில் கடந்த செப்டம்பர் 9ம் தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

53 நாட்கள் சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக ஆந்திர உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 31ம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியில் வந்த நாயுடு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

மேலும் நவ.28ம் தேதி தாமாகவே முன்வந்து அவர் ராஜமுந்திரி மத்திய சிறை
கண்காணிப்பாளர் முன் சரணடைய வேண்டுமென்றும் அவருக்கு வழங்கிய இடைக்கால ஜாமீன் நிபந்தனையில் நீதிமன்றம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நவ.28ல் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஜாமின் கோரி சந்திரபாபு நாயுடு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சந்திரபாபு நாயுடு சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆந்திர ஐகோர்ட் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

மேலும் நவ.29ம் தேதி வரை இடைக்கால ஜாமீனில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை சந்திரபாபு நாயுடு தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக நாயுடு நவ.29ம் தேதி வரை அரசியல் நிகழ்ச்சிகள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

The post திறன் மேம்பாட்டு பயிற்சி கழக ஊழல் வழக்கில் ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Andhra High Court ,Skill Development Training Corporation ,Telangana ,Skill Development Training ,Dinakaran ,
× RELATED சந்திரபாபு வழக்கு விசாரணை தொடர்பாக...