×

திமுக அதன் கூட்டணிகளுக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு: தீர்மானம் நிறைவேற்றம்


சென்னை: சமத்துவ மக்கள் கழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளடக்கிய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை தண்டையார்பேட்டை பாப்பாத்தி டிராவல்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமை வகித்தார். இதில் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப் படத்தை பொதுச்செயலாளர் சூலூர் சந்திரசேகர் திறந்து வைத்து தீர்மானம் வாசித்தார். தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து வரவேற்று பேசும்போது,’’ நீட் தேர்வுக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கத்துக்கு தனது ஆதரவு பங்களிப்பையும் கூறி 10 தீர்மானங்களை கிடப்பில் போடப்பட்டதற்கு கவர்னருக்கு எதிராக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி மீண்டும் அனுப்பியதை வரவேற்பதாக தெரிவித்தார். பாஜக மத்திய அரசு தமிழக அரசையும் தமிழக மக்களையும் வஞ்சிக்கிறது.

நல்ல பல திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாகவும் தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி தொகையை வழங்காமல் காலம்தாழ்த்தி வருகிறது என்றும் குற்றம் சாட்டினார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவை தெரிவித்து 40க்கும் 40 என்ற இலக்குடன் வெற்றிக்கு கழக நிர்வாகிகள் உறுதுணையாக இருப்போம் என்று அறிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், இளைஞரணி செயலாளர் கார்த்திக், கொள்கை பரப்பு செயலாளர் முனிஸ்வரன், தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் விஸ்வநாதன், கழக துணைச் செயலாளர்கள் விநாயகமூர்த்தி, காமராசு நாடார், பாலசேகர், மாவட்டச் செயலாளர்கள் வடசென்னை மாவட்டம் பாஸ்கர், வில்லியம்ஸ், சீனிவாசன், மத்திய சென்னை மாவட்டம் அருண்குமார், ராஜலிங்கம்,

திருவள்ளூர் மாவட்டம் மதுரை வீரன், விஜயன், சுபாஷ், காஞ்சிபுரம் மாவட்டம் ராம், கோவை கணேசன், காஞ்சிபுரம் ரமேஷ், கதிர்வேல், செங்கல்பட்டு பால்ராஜ், பகுதி செயலாளர்கள் ஆர்.கே.நகர் ராஜேஷ், ராயபுரம் செல்வகுமார், சாமுவேல், சுடலைமணி, சங்கர பாண்டியன், சாபுதீன், திருவொற்றியூர் முத்துக்குமார், அன்பரசன், சண்முகம், ஸ்டாலின், கொளத்தூர் செல்வகுமார், பெரம்பூர் ரமேஷ் கண்ணா, மணலி பாலசுப்பிரமணி, மத்திய சென்னை அவினாஷ், மகளிர் அணிகளின் நிர்வாகிகள் தேவி, விஜயலட்சுமி, மீனா, ஜெயலட்சுமி, சிவசாந்தி பாண்டிச்செல்வி உட்பட ஏராளமான கழக, பிற அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கார்த்திக் நாராயணன் நன்றி கூறினார்.

The post திமுக அதன் கூட்டணிகளுக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு: தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Samatwa People's League ,Chennai ,Samattuwa Makkah Kazhagam ,Thiruvallur ,Chengalpattu ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED சாலைகளில் ஆணியை புதைக்கிறது பாஜ அரசு...